Trisha: ஜனநாயகன் பிரச்னை போயிட்டு இருக்கு.. த்ரிஷா ஃபுல் கட்டு கட்டிட்டு இருக்காரே.. அட கூட அவரும் இருக்காரே

Trisha: ஜனநாயகன் பிரச்னை போயிட்டு இருக்கு.. த்ரிஷா ஃபுல் கட்டு கட்டிட்டு இருக்காரே.. அட கூட அவரும் இருக்காரே

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசியவிடப்பட்டது தொடர்பாகத்தான் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக மொத்த திரையுலகமுமே பேசிக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் நடிகர் விஜய்யின் நெருங்கிய தோழியுமான த்ரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்து வெளியாகவுள்ள படமான கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி உடன் செம்ம ஜாலியாக நேரம் செலவிட்டது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டு, நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜன நாயகன். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் கதை ஏற்கனவே தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால், இயக்குநர் ஹெச். வினோத் படத்தின் மொத்த கதையில் சில மாற்றங்களைச் செய்து உருவாக்கி இருந்தார். 

Amid Jana Nayagan Leak Controversy Trisha Spotted Chilling with RJ Balaji Fans Notice Silence

ரிலீஸ் பிரச்னை: படம் ஜனவரி 9ஆம் தேதியே வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் படத்திற்கான ரிலீஸ் சான்றிதழ் கிடைக்காததால், படத்தை வெளியிட முடியவில்லை. இப்படி இருக்கையில் படத்தின் ரிலீஸ் சான்றிதழ் பிரச்னை இன்னும் கிடைக்காத நிலையில் படம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 குப் பிறகுதான் ரிலீஸ் ஆகும் என்று பேச்சுக்கள் எழுந்து வந்தது.

கருத்து தெரிவிக்காத விஜய்: பலரும் ஜன நாயகன் பிரச்னையை மறந்துவிட்டு தேர்தலில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இப்படி இருக்கையில் ஜன நாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் படக்குழுவினருக்கும் ஏற்படுத்தி உள்ளது. மொத்த திரையுலகமும் இதைக் கண்டித்து வரும் நிலையில் நடிகர் விஜய் இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளார்.

த்ரிஷா: இப்படி இருக்கையில், தமிழில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, நடிகர் விஜய்யின் நெருங்கிய தோழியும் கூட இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்து அடுத்து வெளியாக உள்ள படமான கருப்பு படத்தின் இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவரது மனைவி உடன் செம்ம ஜாலியாக நேரம் செலவிட்டது தொடர்பாக புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். தனது நண்பரின் படம் இணையத்தில் லீக் ஆகி உள்ள நிலையில் அது குறித்து எதுவும் அவரது கருத்தை தெரிவிக்காமல், கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவரது மனைவி உடன் ஜாலியாக லஞ்ச் சாப்பிட்டது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES