சங்கீதா விஜய், ஜேசன் ஏன் ஆடியோ லான்சுக்கு வரல!! அது அவசியம் இல்லை!! பிரபலம்..
கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் தான் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பல நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் ஆடியோ லான்ச் தளபதி திருவிழா என்ற பெயரில் மலேசியாவில் கடந்த 27 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு மனைவி சங்கீதா மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இருவரும் வரவில்லை என்ற கருத்து இணையத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில், சங்கீதா நீண்ட காலமாக எதற்குமே வருவதில்லை, அதேமாதிரி தங்கள் பட விழாக்களுக்கு எல்லா நடிகர்களும் அவர்களது குடும்பத்தை அழைத்து வருகிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

அப்படி இருக்கும்போது ஏன் விஜய்யை மட்டும் குறிப்பிட்டு கேட்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு குடும்பத்தை சூட்கேஸ் மாதிரி போகிற இடமெல்லாம் தூக்கி செல்ல வேண்டும் என அவசியம் இல்லை.
அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியாது. ஏன் வருவதில்லை என்பதை சங்கீதாவிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் ஒன்று, விஜய்யுடன் தான் அவருடைய மனைவியும், மகனும், மகளும் இருக்கிறார்கள். அனைவருமே நீலாங்கரை வீட்டில்தான் இருக்கிறார்கள் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.