ஒரு அப்பா, ரெண்டு அம்மா.. வருண் தவான் இடுப்புல இந்தப்பக்கம் பூஜா ஹெக்டே, அந்த பக்கம் மிருணாள் தாக்கூர்!

ஒரு அப்பா, ரெண்டு அம்மா.. வருண் தவான் இடுப்புல இந்தப்பக்கம் பூஜா ஹெக்டே, அந்த பக்கம் மிருணாள் தாக்கூர்!

மும்பை: அட்லி தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்த தெறி ரீமேக் படுதோல்வியை சந்தித்த நிலையில், இந்த ஆண்டு தேசப்பற்று படமான பார்டர் 2 படத்தில் நடித்த வருண் தவான், அடுத்ததாக காத்துவாக்குல ரெண்டு காதல் போல மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக டீசர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியில் தொடர்ந்து மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டே படங்கள் ஃப்ளாப் ஆகி வரும் நிலையில், எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என அவர்களும் எந்தளவுக்கு கவர்ச்சியில் உச்சம் காட்ட முடியுமோ அந்தளவுக்கு காட்டி வருகின்றனர்.

ஏஐ வைத்து உருவாக்கப்பட்ட 2 குழந்தைகள் என் அம்மா பேரு பாணி, என் அம்மா பேரு ப்ரீத் என சொல்லிவிட்டு அப்பா பெயரை சொல்லும் போது இரண்டு குழந்தைகளும் ஜஸ் என ஒரே அப்பா பெயரை சொல்லும்படியாக காட்சியை வைத்துள்ளனர்.

இடுப்புல ரெண்டு ஹீரோயின்: "பார்டர் 2" படத்தில் நடித்த பிறகு, நடிகர் வருண் தவான் தனது பிரதான ரொமான்டிக்-காமெடி (ரோம்-காம்) வகைக்கு திரும்பியுள்ளார். "ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை" எனும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் மற்றும் வருண் தவான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இது அவரது தந்தையும் இயக்குநருமான டேவிட் தவானுடன் வருண் மீண்டும் இணையும் படமாகும்.

ஒரு அப்பா ரெண்டு அம்மா: செவ்வாய்க்கிழமை வெளியான இப்படத்தின் டீசர், AI உருவாக்கப்பட்ட குழந்தைகளின் வாயிலாக ஒரு காதல் முக்கோணத்தை, "டபுள் ட்ரபிள் லவ் ஸ்டோரி"யாகக் காட்டுகிறது. டேவிட் தவானின் 1999ஆம் ஆண்டு வெளியான 'பிவி நம்பர் 1' படத்திலிருந்து புதுப்பிக்கப்பட்ட "இஷ்க் சோனா ஹை" பாடல், படத்தின் தலைப்பு மற்றும் தலைப்புப் பாடலாக உள்ளது.

மே மாதம் ரிலீஸ்: "ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை" ஒரு துடிப்பான, மகிழ்ச்சியான உலகத்தை வழங்குகிறது. அதிரடிப் படங்களால் சமீபகாலமாக மறக்கப்பட்டிருந்த ரோம்-காம் வகைக்கு பாலிவுட் திரும்புவதை இது உணர்த்துகிறது. இது டேவிட் தவானின் 46வது இயக்க முயற்சியாகும்.

ரமேஷ் டாரானி மற்றும் டிப்ஸ் ஃபிலிம்ஸ் லிமிடெட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, மாக்சிமில்லியான் ஃபிலிம்ஸ் (யுகே) இணைத் தயாரிக்கிறது. "ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை" திரைப்படம் மே 22 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

பூஜா ஹெக்டேவின் ஜன நாயகன் அதற்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், வெளியான மிருணாள் தாக்கூரின் டகோயிட் திரைப்படம் சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES