Summer Special: பூ போட்ட குட்டி டவுசர்.. காத்தோட்டமாக ஒர்க்அவுட் செய்யும் சனம் ஷெட்டி!
சென்னை: நடிகை சனம் ஷெட்டி 2012ஆம் ஆண்டு வெளியான அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், மாடலிங், அழகிப்போட்டிகள், ரியாலிட்டி ஷோக்கள் என பல தளங்களில் தன்னை நிரூபித்துள்ளார். 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற சனம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
சினிமாவை விட சர்ச்சைகள் மூலமாகவே அதிகம் பேசப்பட்ட சனம் ஷெட்டி, பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுடன் இருந்த காதல் விவகாரம் காரணமாக ஒரு கட்டத்தில் செய்திகளில் தலைப்பானார். அந்த சர்ச்சையை தொடர்ந்து பலரும் விமர்சித்த போதும், தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்த சனம் ஷெட்டி, பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 64 நாட்கள் தாக்குப்பிடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். வீட்டுக்குள் நேர்மையாகவும் தைரியமாகவும் விளையாடிய போட்டியாளராக அப்போது பேசப்பட்டார்.

நடிகை சனம் ஷெட்டி: மாடலிங் உலகில் கலக்கிய சனம், பல சர்வதேச ஃபேஷன் ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். சமூக பிரச்சனைகள் குறித்தும் அடிக்கடி கருத்து தெரிவித்து வரும் அவர், பெண்கள் பாதுகாப்பு, சைபர் தொல்லை, பெண்கள் மீதான வன்முறை போன்ற விஷயங்களில் வெளிப்படையாக குரல் கொடுத்து வருவது அவரது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஒர்க் அவுட்: பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் சமூக வலைதளங்களில் ரசிகர்களை தொடர்ந்து கவனத்தை பெற்று வரும்சனம் ஷெட்டி, உடற்பயிற்சி மற்றும் ஃபிட்னஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். யோகா, டான்ஸ், ஜிம் ஒர்க்அவுட் வீடியோக்களை அவ்வப்போது பகிரும் அவர், தற்போது வெயிலுக்கு ஏற்றபடி பூ போட்ட குட்டி டவுசர் மற்றும் முண்டா பனியனில் காத்தோட்டமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், "Fitness Queen", "Age reverse ஆகுதே", "சனம் இன்னும் செம்ம ஃபிட்" என ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து வருகின்றனர். சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சனம் ஷெட்டி, மீண்டும் கம்பேக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் இந்த பதிவுகள் சொல்லாமல் சொல்கின்றன.