Oviya: கடற்கரையில் வேறலெவல் கவர்ச்சி.. லைட்டா வெயிட் போட்டுட்டீங்க ஓவியா.. கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் கடல் அலையோடு விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ' இதயதில் ஏதோ ஒன்று' பாடலுடன் வெளியிட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
களவாணி படத்தில் ரெட்ட ஜடை போட்டு அப்பாவி பெண்ணாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை தொட்ட ஓவியா, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து பெயர் எடுத்தார். ஓவியாவிற்கு திடீரென தமிழில் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து மலையாளம், தெலுக்குக்கு படவாய்ப்பு தேடி அலைந்தார்.
நடிகை ஓவியா: ஆனால், அங்கும் படங்கள் சரியாக அமையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஓவியா சினிமாவில் நடித்ததை விட, பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு பெயரை பெற்றுத்தந்தது. ஏன் என்றால், ஜூலியுடன் பிரச்சனை ஏற்பட்ட போதும் யாரிடமும் பொய் சொல்லாமல் நேர்மையாக விளையாடி ரசிகர்களின் மனதை வென்றார். இதனால், ஓவியா தான் டைட்டிலை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

பிக் பாஸ்: ஆனால், ஆரவ் உடனான காதலால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஓவியா, இதற்கு மேல் இந்த நிகழ்ச்சியில் இருக்க முடியாது என சொல்லிவிட்டு, நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சி பின் இவருக்கு சினிமாவில் பெயர் எடுக்கும் அளவிற்கு வாய்ப்பு வரவில்லை என்றாலும் சமூகவலைதளத்தில் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இன்றளவும் உள்ளது. இதனால், அவர்களை ஓவியா எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்து இருக்கிறார்.
ஆபாச வீடியோ: கடந்த ஆண்டு, நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ போன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்து அது ஓவியா தான் என இணையத்தில் செய்தி பரவியது. இதற்கு பதிலளித்த ஓவியா, அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று மறுத்ததோடு மட்டுமில்லாமல் இதுகுறித்து புகாரும் கொடுத்து ஆபாச வீடியோ குறித்து தைரியமாக பேசி இருந்தார். கடல் அலையோடு விளையாடும் ஓவியா: இந்நிலையில், நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் க்யூட்டாக கடல் அலையில் விளையாடி உள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அந்த பாடலுக்கு தகுந்த படி இதயத்தை 'ஏதோ ஒன்று ' என என்னை அறிந்தால் படத்தில் வரும் பாடலை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.