ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் வரும் லேட்டஸ்ட் ஹிட் படம்! ப்ரோமோவுடன் இதோ
டிவி சேனல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து அதிகம் டிஆர்பி ரேட்டிங் பெறுவதற்காக தொடர்ந்து புதுப்புது தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.
மேலும் விடுமுறை நாட்களில் புதுப்புது படங்களாகவும் ஒளிபரப்புகின்றனர்.
தாய்க்கிழவி
வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7ம் தேதி, ராதிகா நடித்த தாய்கிழவி படம் விஜய் டிவியில் வர இருக்கிறது. ஞாயிறு மதியம் 3:30 மணிக்கு தாய்கிழவி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
சிவகுமார் முருகேசன் இயக்கிய தாய் கிழவி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார். ராதிகா வயதா ரோலில் நடித்து இருந்தது ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிலையில் படம் நல்ல வசூலை குவித்து ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.