இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம்

பாரதிராஜா

தன்னுடைய படங்களால் தமிழ் சினிமாவில் பல புரட்சிகளை செய்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, புதுமை பெண், முதல் மரியாதை போன்ற பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக கடந்த 2020-ஆம் ஆண்டு வெளிவந்த மீண்டும் ஒரு மரியாதை என்கிற படத்தை இயக்கியிருந்தார்.

இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் | Veteran Director Bharathiraja Passes Away

கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

காலமானார்

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா இன்று (10.06.2026) காலை காலமானார். இவருடைய வயது 84. சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அதிகாலையில் உயிர் பிரிந்தது. பாரதிராஜாவின் இழப்பு திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. திரையுலகினர் தங்களது இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் | Veteran Director Bharathiraja Passes Away

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா கடந்த 2025-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News

HOT GALLERIES