நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய சீரியலில் பாரதி கண்ணம்மா புகழ் அருண்... நாயகி இவர்தானா, போட்டோ

நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய சீரியலில் பாரதி கண்ணம்மா புகழ் அருண்... நாயகி இவர்தானா, போட்டோ

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

அப்படி சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பாக தொடங்கி மிகப்பெரிய வெற்றியடைந்து பின் முடிவுக்கும் வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்கத்தில் அருண் பிரசாத் நாயகனாக நடிக்க முதலில் ரோஷினி நாயகியாக நடித்தார், அவருக்கு பிறகு வினுஷா நடித்து வந்தார்.

இந்த சீரியல் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் என்றே கூறலாம், தற்போது மீண்டும் விஜய் டிவியில் இந்த சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய சீரியலில் பாரதி கண்ணம்மா புகழ் அருண்... நாயகி இவர்தானா, போட்டோ | Bharathi Kannamma Actor Arun New Serial

புதிய சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் தான் அருண் பிரசாத். இந்த சீரியல் மூலம் கவனம் பெற்றவர் அடுத்து விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார்.

அதன்பின் அருண் தனது காதலியும் நடிகையுமான அர்ச்சனாவை நிச்சயதார்த்தம் செய்து அவருடன் நிறைய ஊர் சுற்றி வருகிறார். இந்த நிலையில் அருண் கமிட்டாகியுள்ள புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது காதல் காதல் காதல் என விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியலில் நடிக்கிறாராம். இவருக்கு ஜோடியாக அண்ணா சீரியல் புகழ் சுசித்ரா நடிக்கிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES