எதிர்நீச்சல் தொடர்கிறது- குணசேகரனுக்கு வைக்கப்பட்ட செக், கண்டுபிடித்த ஜனனி...

எதிர்நீச்சல் தொடர்கிறது- குணசேகரனுக்கு வைக்கப்பட்ட செக், கண்டுபிடித்த ஜனனி...

எதிர்நீச்சல் தொடர்கிறது

இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே ஒரு கேள்வி தான் அதிகம் வருகிறது.

அதாவது அத்தனை தவறுகள் செய்யும் குணசேகரனுக்கு ஏன் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை என்பது தான். இப்போதும் அவர் கையில் அதிகாரம் இருக்கிறது, அவர் போடும் பிளான்கள் தான் ஜெயிக்கிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது- குணசேகரனுக்கு வைக்கப்பட்ட செக், கண்டுபிடித்த ஜனனி... | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என போராடும் 4 பெண்களுக்கு மட்டுமே அடுத்தடுத்து பிரச்சனைகளாக வந்து குவிகிறது.

தனது பிள்ளைகளை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரிக்கு இப்போது தர்ஷன் செயல்கள் பிரச்சனையாக அமைந்துள்ளது. ராவணன் வலையில் சிக்கிய தர்ஷன் ஏதேதோ செய்து வருகிறார்.

கதிர் திருந்தி மனைவி சொல்வதை கேட்டு நடக்க ஞானம் மீண்டும் குணசேகரன் வலையில் சிக்கி பழையபடி ஆகிவிட்டார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது- குணசேகரனுக்கு வைக்கப்பட்ட செக், கண்டுபிடித்த ஜனனி... | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

புரொமோ

இன்றைய எபிசோடின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வரும் 25ம் தேதி குணசேகரன் நீதிமன்றம் செல்ல வேண்டியது இருக்கும் என வக்கீல் கூறுகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது- குணசேகரனுக்கு வைக்கப்பட்ட செக், கண்டுபிடித்த ஜனனி... | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

இந்த விஷயத்தை தர்ஷன் ஆலிவர்-ராவணனிடம் கூற அவர்கள் அந்த நாளே குணசேகரனின் கடைசிநாள் என பிளான் போடுகிறார்கள்.

இதற்கு இடையில் தர்ஷன் வழக்கத்தை விட வேறு மாதிரி நடப்பதற்கு ராவணனாக கூட இருக்கலாம் என சரியாக கண்டுபிடிக்கிறார். 

LATEST News

Trending News