கதிர், ஞானத்தை டீலில் விடும் குணசேகரன், இப்படி ஒரு முடிவா, ஷாக்கில் தம்பிகள்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
முதல் பாகத்தில் தவறு செய்யும் குணசேகரன் கை ஓங்கியும் நியாயமாக இருக்க நினைக்கும் பெண்கள் அடிமையாகவும் இருப்பதாகவே கதை நகர்ந்தது.

இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக தொடங்கியதும் பெண்கள் கை ஓங்கியபடி காட்டுவார்கள், அநியாயம் செய்யும் குணசேகரனுக்கு தண்டனை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த 2ம் பாகத்திலும் பெண்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள், குணசேகரன் ஜெயித்துக்கொண்டு தான் இருக்கிறார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், வில்லனுக்கே வில்லனிசம் காட்ட இப்போது ராணா ஆதிமுத்து குணசேகரன் வீட்டில் என்ட்ரி கொடுத்துவிட்டார். குணசேகரனும் ராணா மீது மிகவும் நம்பிக்கை வைத்துவிட்டார் என தெரிகிறது.
புரொமோவில், ராணாவிடம் நீ என் ரத்தம் என குணசேகரன் கூற கதிர் கேட்டு ஷாக் ஆகிறார். பின் குணசேகரன் ராணா சொன்ன விஷயத்திற்கு ஓகே கூற கதிர் அது வேண்டாம் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்கிறார்.
ஆனால் குணசேகரன் கதிர் சொன்னதை கேட்காமல் இல்லை அந்த வக்கீல் என்ன யோசனை கொடுத்துவிட்டான், எனக்கு சரி என்று படுகிறது, நான் முடிவு செய்துவிட்டேன் என்கிறார். அதைக்கேட்ட கதிர் மற்றும் ஞானம் ஷாக் ஆகிறார்கள்.