ராம் சரணுடன் பெத்தி படத்தில் நடிக்க ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா?

ராம் சரணுடன் பெத்தி படத்தில் நடிக்க ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா?

பெத்தி படம்

தெலுங்கு சினிமா படங்கள் இப்போதெல்லாம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. பாகுபலி படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமா மிகவும் பிரபலமாகிவிட்டது, இதனால் பல படங்கள்  பான் இந்தியா படமாக வெளியாகிறது.

கடைசியாக தெலுங்கு சினிமாவில் வெளியான முன்னணி நடிகரின் படம் என்றால் அது ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் தான். புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்க வெளியான இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்திருந்தார்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் கடந்த வாரம் வெளியானது, ரூ 300 கோடியை தாண்டிய வசூல் வேட்டையில் படம் உள்ளது.

 

சம்பளம்

விளையாட்டை மையப்படுத்தி முக்கிய விஷயத்தை பேசியுள்ள இப்படத்தில் ஒரு விஷயம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அதாவது நடிகை ஜான்வி கபூர் காட்சிகள் மிகவும் கிளாமராக காட்டப்பட்டுள்ளது.

பெண்கள் என்றால் இதற்கு தானா, இப்படியா எடுப்பீர்கள் என மோசமான விமர்சனங்கள் எழ படக்குழு அந்த காட்சிகளை சரி செய்திருந்தனர்.

இப்போது படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்திற்காக ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது ஜான்வி கபூர் பெத்தி படத்திற்காக ரூ. 8 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES