Body Count-ஐ ரிவீல் செய்த பிக்பாஸ் விஷ்ணு பிரியா.. ரசிகர் கேட்டதும் டக்குனு சொல்லிட்டாங்களேப்பா

Body Count-ஐ ரிவீல் செய்த பிக்பாஸ் விஷ்ணு பிரியா.. ரசிகர் கேட்டதும் டக்குனு சொல்லிட்டாங்களேப்பா

சென்னை: ஹைதராபாத்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் விஷ்ணு பிரியா. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்றதன் மூலம் இவர் ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார். சமூக வலைதளங்களிலும் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படி இருக்கையில், அண்மைக் காலமாக இவரைச் சுற்றி நடக்கும் சர்ச்சைகள் தான் சோசியல் மீடியாவின் தற்போதைய ஹாட் டாபிக்.

முன்னதாக, தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த விஷ்ணு பிரியா, அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டணச் சந்தா முறையான 'சப்ஸ்கிரிப்ஷன்' (Subscription) வசதியைத் தொடங்கினார். காசு கொடுத்தால் மட்டுமே தனது பிரத்யேகப் பதிவுகளைப் பார்க்க முடியும் என்ற இந்த வசதி, இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

Bigg Boss Telugu Fame Vishnu Priya Bhimeneni Reveals Her Body Count Fans Left Stunned

போலீஸ் புகார்: இதற்கிடையே, நடிகை விஷ்ணு பிரியா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யக் கோரி ஏஐஎஸ்எஃப் (AISF) அமைப்பினர் சைபர் கிரைம் போலீசாரிடம் அதிரடியாகப் புகார் அளித்துள்ளனர். பணத்திற்காக இளைஞர்களைத் தவறான வழியில் வழிநடத்தும் விதமாக அரைகுறை ஆடை வீடியோக்களை அவர் பதிவிட்டு வருவதாகவும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை உடனடியாக முடக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்தப் புகாரில் வலியுறுத்தியுள்ளனர். சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பிரபலங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.


ஆனால், இந்தச் சர்ச்சை விஷ்ணு பிரியாவுக்கு மறைமுகமாகப் பெரிய சாதகமாக அமைந்துவிட்டதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை புகார் பதிவாவதற்கு முன்பு வரை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சப்ஸ்கிரைபர்களை மட்டுமே கொண்டிருந்த அவரது கணக்கில், இந்தப் பிரச்சனைக்கு பின்னர் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறியுள்ளது. இதனால் அவரது வருமானம் கோடிகளுக்கு உயர்ந்துள்ளது.

Bigg Boss Telugu Fame Vishnu Priya Bhimeneni Reveals Her Body Count Fans Left Stunned

லைவில் கேட்ட நெட்டிசன்.. ஓப்பனாக சொன்ன விஷ்ணு பிரியா: இந்நிலையில், சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, விஷ்ணு பிரியா அண்மையில் இன்ஸ்டாகிராமில் நேரலையில் தோன்றி ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடினார். அப்போது அவரிடம் நெட்டிசன் ஒருவர், அவரது 'பாடி கவுண்ட்' குறித்து நக்கலாகக் கேள்வி எழுப்பினார்.

பாடி கவுண்ட்: பொதுவாக இதுபோன்ற சங்கடமான கேள்விகளுக்குப் பிரபலங்கள் மழுப்பலாகப் பதிலளிப்பார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனால், அதற்கு சற்றும் தயங்காமல் நெத்தியடியாகப் பதிலளித்த விஷ்ணு பிரியா, "எனது பாடி கவுண்ட் 5" என்று மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்தார். இவரா இப்படிப் பேசினார் என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ள இந்த லைவ் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருவதோடு, காட்டுத்தீ போல வைரலாகியும் வருகிறது.

LATEST News

Trending News