கருப்பு படத்தில் பினு இறந்துவிட்டாரா, உயிரோடு இருக்கிறாரா? கிளைமாக்ஸ் பற்றி அவரே விளக்கம்
சூர்யாவின் கருப்பு படத்தில் பினு கதாபத்திரத்தில் அனகா மாயா ரவி நடித்து இருந்தார். படத்தின் பாதியிலேயே அவர் கதாபாத்திரம் இறந்துவிடுவது போல தான் கதை நகரும்.
ஆனால் படத்தின் கிளைமாக்சில் அவர் உயிருடன் அவரது அப்பா உடன் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவது போல காட்சி வரும். அதனால் அவர் இறந்துவிட்டாரா இல்லையா, கிளைமாக்ஸ் திரிஷாவின் கற்பனையா என்கிற குழப்பம் எழுந்தது.
பேட்டி
அது பற்றி நடிக்க அனகா மாயா ரவி பேட்டியில் பேசி இருக்கிறார்.
"அது எனக்கே தெரியாது. படத்தில் நான் இறந்துவிட்டேனா, உயிருடன் இருக்கிறேனா? என ரைட்டர் அஸ்வினிடம் கேட்டேன். அது ரசிகர்கள் தான் யோசிக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறினார். அவர்கள் என்னிடம் கூட அதை சொல்லவில்லை" என நடிகை கூறியிருக்கிறார்.