விவாகரத்து இப்போதைக்கு வேண்டாம்னு நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி..

விவாகரத்து இப்போதைக்கு வேண்டாம்னு நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி..

பிரபலம் ஒருவரை உருகி உருகி காதலித்து பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி குழந்தைகள் எல்லாம் பெரியவர்களாக திருமண வயதை எட்டிய நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே ஒரு நடிகையால் திடீரென வெடித்த பிரச்சனையால் விவாகரத்து வரை சென்றுவிட்டது. இன்னும் தன்னுடைய கணவரைவிட்டு பிரிய மனைவிக்கு விருப்பமே இல்லையாம்.

விவாகரத்து இப்போதைக்கு வேண்டாம்னு நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி.. | Celebrity Wifes Decision Around Divorce Matter

 

சேர்ந்து வாழவும் கணவர் செய்த துரோகம், குழந்தைகளுக்கு நேர்ந்த அவமானம் உள்ளிட்டவற்றை அந்த பிரபலத்தின் மனைவியை படாதபாடு படுத்தி வருகிறதாம். விவாகரத்து மேட்டார் நீதிமன்றம் வரை வந்த நிலையில், விவாகரத்து இப்போ வேண்டாம் என்ற முடிவில் பிரபலத்தின் மனைவி இருகிறார்.

ஆனால் வழக்கை வாபஸ் செய்தால் வேறு சில பிரச்சனைகள் வெடிக்கும் என்பதால், வழக்கை இழுத்தடிக்கும் எண்ணத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து வழக்கை நீட்டித்திக் கொண்டே செல்லும் ஐடியாவிலும் இருக்கிறாராம்.

எப்படியாவது விவாகரத்து மேட்டர் செட்டிலாகிவிட்டால், அடுத்து அந்த பிரபலத்தை முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கொக்கு போல காத்திருக்கும் நடிகைக்கு பிரபலத்தின் மனைவியின் இந்த திடீர் முடிவு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிரபலம் யாரை சமாதானப்படுத்துவது, யாரை சரி கட்டுவது, தலைக்கு மேல் பல பிரச்சனைகள் உள்ள நிலையில், இப்போதைக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதால் நடிகை ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்.

அதனால் இப்போது அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு நடிகை தள்ளப்படுள்ளாராம். அதேபோல் மனைவியும் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் அவசரப்பட்டால் செய்ய முடிவெடுத்துள்ளார் என்ற பேச்சுக்கள் புகைந்து வருகிறது.

LATEST News

Trending News