பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள எங்கள் தங்கம் திரைப்படம்.. 7 நாட்களில் செய்துள்ள வசூல்
எங்கள் தங்கம்
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் எங்கள் தங்கம். இப்படத்தை சமந்தா தனது கணவருடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிகை கௌதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பின் சமந்தா நடிப்பில் இந்த படம் வெளியானது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வந்தாலும் கூட, கலவையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

வசூல்
எங்கள் தங்கம் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 7 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 7 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.