Namitha Gym Video: சுயக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்.. ஜிம் வீடியோவை இறக்கி தத்துவமா கொட்டும் நமிதா

Namitha Gym Video: சுயக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்.. ஜிம் வீடியோவை இறக்கி தத்துவமா கொட்டும் நமிதா

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை நமிதா, திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக தனது உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பதிவுகளை அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களுடன் எப்போதும் டச்சில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள ஜிம் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

நடிகை நமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அத்தோடு, சுயக்கட்டுப்பாடு, தொடர்ந்து முயற்சி செய்வது மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறும் மனநிலை குறித்து பல ஊக்கமூட்டும் கருத்துகளையும் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது மட்டும் இல்லாமல் செம்ம மோட்டிவாகவும் இருக்கிறது என்றும் கமெண்ட் செக்‌ஷனில் போஸ்ட்கள் பறக்கிறது.

Actress Namitha Shares Intense Gym Workout Video Inspires Fans with Message on Self-Discipline

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "காரணங்களைச் சொல்வதை விட, உங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்வதுதான் சுயக்கட்டுப்பாடு. ஒவ்வொரு நாளும் செய்யும் உடற்பயிற்சியும், நமக்கு நாமே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது போன்றது. ஊக்கம் சில நாட்கள் மட்டுமே இருக்கும். ஆனால் சுயக்கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே தினமும் ஒரே வேகத்தில் பயணிக்க முடியும்.

மனசு மாறினால் தான்: மனம் மாறினால் தான் உடலும் மாறும். வெற்றிக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. தொடர்ந்து செய்யும் முயற்சி, வியர்வை மற்றும் பொறுமை மட்டுமே இலக்கை அடைய வைக்கும். மற்றவர்களுடன் போட்டி போட வேண்டிய அவசியமே இல்லை. நேற்று இருந்த நம்மைவிட இன்று கொஞ்சம் முன்னேறினால் அதுவே உண்மையான வெற்றி.


ஒரே நாளில் வெற்றி: மேலும், வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதில்லை. தினமும் தொடர்ந்து செய்யும் சிறிய முயற்சிகள்தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். எல்லாவற்றிலும் கடினமான விஷயம் முதல் அடியை எடுத்து வைப்பதுதான். அதை செய்து விட்டால், பாதி வெற்றி கிடைத்தது போலத்தான்" என்றும் நமிதா தனது ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தெரிவித்துள்ளார். இவரது இந்த மோட்டிவேஷனல் பிளாசஃபி போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாராட்டுகள்: நமிதாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல ரசிகர்கள் அவரது விடாமுயற்சியையும், ஃபிட்னஸுக்காகதொடர்ந்து செலுத்தி வரும் உடற்பயிற்சியை பாராட்டி வருவதுடன், "இது பலருக்கும் ஊக்கமளிக்கும் போஸ்ட்", "உடற்பயிற்சியுடன் நல்ல சிந்தனையையும் பகிர்ந்திருக்கிறீர்கள்" என்று கமெட்ண் செக்‌ஷனில் பாராட்டி வருகின்றனர்.

LATEST News

Trending News