டிரோன்ஸ்: திரை விமர்சனம்

டிரோன்ஸ்: திரை விமர்சனம்

சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், 'பரிதாபங்கள்' டிராவிட் செல்வம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள டிரோன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

விஞ்ஞானி குரைஷியின் பிளாக் ஹோல் என்ற லேபிற்கு, கல்லூரி மாணவர்களான டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே.தீபக் மூவரும் செல்கின்றனர். குரைஷி கூறும் நிபந்தனைகளை ஏற்று அவர்கள் அங்கே இருக்க, சம்பங்கி என்ற டிரோன் அவர்களுக்கு தேவையானதை கொண்டு வந்து தருகிறது.

இந்த சூழலில் டிராவிட் செல்வம் மேனுவலாக டிரோனை இயக்க, அது ஒரு வீட்டின் ஜன்னலுக்கு செல்கிறது. அங்கே சித்தி இத்னானி இருப்பதை டிரோன் வழியாக பார்க்கும் டிராவிட் அவர் மீது காதல் கொள்கிறார். இதனை தனது நண்பர்களிடம் கூற, ஒருதலையாக காதலிக்கும் அஞ்சலி நாயர் உடைந்து அழுகிறார்.

டிரோன்ஸ்: திரை விமர்சனம் | Drones Movie Review

என்றாலும் டிராவிட் முன் அதனை காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். தனது பாட்டி தேவதர்ஷினியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சித்தி இத்னானி தூக்குமாட்டிக் கொள்ள, அச்சமயம் டிரோன் மூலமாக பார்க்கும் டிராவிட் பதறிப் போய் அவரைத் தடுக்கிறார்.

இதற்கிடையில் டான்சிங் சைக்கோ என்ற முகம் தெரியாத கொலைகாரன் ஜோசியக்காரர் உள்ளிட்ட சிலரை கொலை செய்து வருகிறான். அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் சினிமாவாலா சதீஷ், தனக்கு ஒரு சாபம் இருப்பதை அறிந்துகொள்கிறார். அவர் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடித்தாரா? டிராவிட் செல்வத்தின் காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

டிரோன்ஸ்: திரை விமர்சனம் | Drones Movie Review

படம் பற்றிய அலசல்

சயின்ஸ் பிக்சன், சூனியக்காரி என்ற இரண்டு விஷயங்களை ஒன்றாக சேர்த்து ராகவ் மிர்தாத் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். பிளாக் ஹோல் என்ற லேப்பின் டிசைனை பேக்ரூம்ஸ் படத்தின் இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தாலும், சிறிய பட்ஜெட் படத்தில் அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

அதேபோல் சூனியக்காரி போர்ஷனில் வைத்த சஸ்பென்ஸ் எல்லாம் யூகிக்க முடியாத வகையில் இருந்தது நல்ல ரைட்டிங். நிறம் தான் அழகா? உடலைப் பார்ப்பதுதான் காதலா? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடையையும் தரும் வகையில் திரைக்கதை அமைத்தது சிறப்பு.

 

டிரோன்ஸ்: திரை விமர்சனம் | Drones Movie Review

என்றாலும் முதல் பாதி சற்று நீளமாக செல்லும் உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து ஆச்சரியத்தை கொடுத்து நல்ல கிளைமேக்ஸ் உடன் படத்தை முடித்துள்ளார் இயக்குநர். நடிகர்களைப் பொறுத்தவரை டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே.தீபக் மூவரும் மிகையில்லாத நடிப்பதை தந்துள்ளனர்.

தீபக்கின் ஒரு சில கவுண்ட்டர் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. சினிமாவாலா சதீஷ் போலீசாக கச்சிதமாக நடித்துள்ளார். அவருடன் பயணிக்கும் நக்கலைட்ஸ் சசி ஆங்காங்கே சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். குரைஷி வசன உச்சரிப்பு, சற்று வில்லத்தனம் காட்டுவது, கூடவே காமெடி செய்வது என ஸ்கோர் செய்திருக்கிறார்.

 

டிரோன்ஸ்: திரை விமர்சனம் | Drones Movie Review

இவர்களை தாண்டி முக்கிய கதாபாத்திரங்களான சித்தி இத்னானி மற்றும் தேவதர்ஷினி இருவரும் படத்தை தாங்கி நிற்கின்றனர். அழகுப்பதுமையாக தோன்றும் சித்தி இத்னானி தனக்கான மாறுபட்ட கதாபாத்திரங்களை அருமையாக கையாண்டுள்ளார்.

தேவதர்ஷினி ஆங்காங்கே பயமுறுத்தி கிளைமேக்ஸில் எல்லோரையும் மிஞ்சுபடியான நடிப்பை தந்துவிடுகிறார். ஹரியின் இசை, ஜெயந்த் சேது மாதவனின் கேமரா, சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு என அனைத்தும் படத்தை செதுக்கியுள்ளன. ஆர்.கிஷோரின் செட் ஒர்க் படத்தின் மிகப்பெரிய தூண் ஆகும்.

க்ளாப்ஸ்

  • கதை
  • திரைக்கதை
  • ட்விஸ்ட்கள்
  • நடிகர்களின் பங்களிப்பு
  • கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

  • முதல் பாதி மெதுவாக நகர்வது

 

மொத்தத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த டிரோன்ஸ், என்டர்டைன்மெண்ட் என்ற வேலையை சிறப்பாக செய்துவிட்டது. கண்டிப்பாக ஒரு விசிட் அடிக்கலாம்.

டிரோன்ஸ்: திரை விமர்சனம் | Drones Movie Review

LATEST News

Trending News