அந்த குளியலறை வீடியோ.. திரிஷாவா இல்லையானே தெரியாமத்தானே பார்த்தோம்.. கஸ்தூரி ஓபன்

அந்த குளியலறை வீடியோ.. திரிஷாவா இல்லையானே தெரியாமத்தானே பார்த்தோம்.. கஸ்தூரி ஓபன்

சென்னை: நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் 90களில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்த அவர்; ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கும் சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் தன்னை எப்போதும் ஆக்டிவ்வாக வைத்துக்கொள்ளும் அவர் சமீபத்தில் பாக்யராஜுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்றார். அப்போது அவர் சிரித்துக்கொண்டே வந்ததாக சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

மிஸ் சென்னை பட்டம் வென்று அசத்திய கஸ்தூரிக்கு ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் 1991ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தமிழில் அறிமுகமான அதே வருடத்திலேயே மலையாளத்திலும் சக்ரவர்த்தி படத்தின் மூலம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. தமிழில்அவர் ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ் பாட்டு, அபிராமி, என ஏராளமான படங்களில் நடித்து அசத்தினார். அவற்றில் சில படங்கள் ஹிட்டாகின; சில படங்கள் தோல்வியடைந்தன.

Actress Kasthuri Breaks Silence on Viral Videos If I Say It s Not Me I Have To Prove It s AI

கமலுக்கு மகளாகவும், தங்கையாகவும் கஸ்தூரி: ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்தபோதே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தில் ஒரு கமலுக்கு மகளாகவும், ஒர கமலுக்கு தங்கையாகவும் நடித்தார். இந்தியன் படம் அவருக்கு ஒரே இரவில் அதிக பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்தது என்றே சொல்லலாம். இதற்கிடையே தமிழில் அவருக்கு வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய தெலுங்கு பக்கம் சென்று அங்கும் பிஸியானார்.

அஞ்சாமல் கூறும் கஸ்தூரி: ஒருகட்டத்தில் அவருக்கு அங்கும் வாய்ப்புகள் குறைய திரைத்துறையில் அவ்வப்போது மட்டுமே தலை காட்டி வருகிறார். இப்போதும் கேரக்டர் ரோலில் சில படங்களில் நடித்துவரும் கஸ்தூரி; பொது விஷயங்களில் அஞ்சாமல் கருத்து சொல்பவர். ஆனால் அப்படி அவர் சொல்லும் கருத்துக்கள் அவருக்கு சிக்கலைத்தான் உண்டாக்கும். சில வருடங்களுக்கு முன்புகூட தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசினார் என்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

சிரித்தாரா கஸ்தூரி: சூழல் இப்படி இருக்க கஸ்தூரி குறித்து சமீபத்தில் இன்னொரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, திரைக்கதை மன்னன் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்றபோது அவர் சிரித்துக்கொண்டிருந்தார் என சொல்லி வீடியோ ஒன்று வைரலானது. மேலும், குடித்துவிட்டு டான்ஸ் ஆடுவதாகவும் வீடியோ ஒன்று பரவியது. அது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் அவர்.

கஸ்தூரி பேட்டி: நடிகைகளை இப்படி தொடர்ந்து அவதூறாக பேசுவது பற்றி குறிப்பிட்ட அவர், "குத்து விளக்கு பாடலுக்கு ஆடியது பற்றி எனது குழந்தைகள் ஆச்சரியப்படுகிறார்கள். நல்ல மீடியாக்கள் அதனை பாராட்டுகிறார்கள். கஸ்தூரி என்று சொல்லி நல்லதும் வருது கெட்டதும் வருது.இது எனக்கு மட்டும் நடக்கவில்லை. சமந்தாவுக்கு, திரிஷாவுக்கு வராததா எனக்கு வந்துவிட்டது. ஏதோ ஒரு பெண் ஷவரில் குளிக்கிறார். அது பெண்ணா, ஆணா என்று கூட தெரியவில்லை. இருந்தாலும் அதை மொபைலில் பார்த்துக்கொண்டுதானே இருந்தோம்.

ராஷ்மிகாவுக்கு நடந்தது: இப்போது ஏஐயில் ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வந்ததுதானே. அதையும் பார்க்கத்தானே செய்தார்கள்.நான் குடிக்கவில்லை அந்த வீடியோவில் இருப்பது இல்லை என நான் சொன்னால்; அது ஏஐ என்று நான் நிரூபிக்க வேண்டும். எது உண்மை எது பொய் என்று எனக்கே தெரியவில்லை" என்றார்.

LATEST News

Trending News