பிக் பாஸ் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் கைது..

பிக் பாஸ் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் கைது..

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்

இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் திவாகர். கஜினி படத்தில் வாட்டர்மெலன் வைத்து கொண்டு நடிகர் சூர்யா செய்த ஒரு செய்கையை இவர் செய்தது வைரலானது. இதனால், இவர் தனக்கு தானே 'வாட்டர்மெலன் ஸ்டார்' என பெயர் வைத்து கொண்டார்.

இதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக திவாகர் பங்கேற்றார். 43 நாட்களில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கைது 

இந்த நிலையில், திவாகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

YouTube சேனல் ஊழியரை மிரட்டி ரூ. 1 லட்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், திவாகர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவரிடம் கீழ்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES