தாலி கட்டுற வரைக்கும் இல்லை.. கடைசி வரைக்கும் மனைவிக்கு லவ்வும் மரியாதையும் கொடுக்கணும் - சூர்யா!
சென்னை: Grey Divorce தமிழ்நாட்டிலேயே அநியாயத்துக்கு அதிகரித்து வரும் சூழலில் இன்னமும் காதலின் மகத்துவத்தையும் மனைவிக்கு கடைசி வரை கொடுக்க வேண்டிய மரியாதை பற்றியும் சூர்யா பேசியது ரசிகர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
பல வருடங்களாக நடிகர் சூர்யா எந்தவொரு பட்டப் பெயரையும் தனக்கென வைத்துக் கொள்ளவில்லை. நடிப்பின் நாயகன் சூர்யா என்கிற பட்டப் பெயர் கூட சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதி போல செம கேட்ச்சியாக இல்லை.

ஆனால், தற்போது தனது ரசிகர்களுக்காக 'தி ஒன்' ஆக ரெட்ரோ படத்தில் இருந்து மாறிய சூர்யா தொடர்ந்து அந்த டைட்டிலை பயன்படுத்தி வருகிறார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் 'தி ஒன்' பட்டப்பெயருக்கான ஸ்பெஷல் ஆல்பத்தை ஜி.வி. பிரகாஷ் பாடி வெளியிட்டார்.
கருப்பு வெற்றிக்கு நன்றி: இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் அதிகப்படியாக 340 கோடி வசூலை ஈட்டி இதுவரை முதலிடத்தில் உள்ளது. விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி ரிலீஸ் செய்து சுமார் 300 கோடி வசூலை கடந்துள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கும் கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் ஆகாமல் போன நிலையில், அதற்காக உதவி செய்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்த சூர்யா சீக்கிரமே 100வது நாள் வெற்றி விழாவை கொண்டாடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், சுனில் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கண்டிப்பாக அன்பான ஃபேன்ஸை தாண்டி அவர்களது குடும்பங்களையும் கவரும் என சூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸ்க்ரீன் டைமை குறைத்துக் கொண்டு சொந்த பந்தங்களுடன் நிஜ நினைவுகளை அதிகப்படுத்துங்கள் என சூர்யா சொன்ன அட்வைஸும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மனைவிக்கு காதலும் மரியாதையும்: லவ் பண்ணிட்டு திருமணத்தில் தாலி கட்டியவுடன் லவ் முடிந்து போவதில்லை. அதன் பின்னர் அவங்களை ஒவ்வொரு நாளும் எப்படி காதலிக்கிறோம் என்பது தான் முக்கியம். வருடங்கள் ஆக ஆக காதலை விட அவங்களுக்கு கொடுக்கக் கூடிய மரியாதை தான் ரொம்பவே முக்கியம் என சூர்யா எப்படி ஜோதிகாவுக்கு காதலும் மரியாதையையும் கொடுக்கிறாரோ அதே போல ரசிகர்களும் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கோவையில் நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், வரும் ஆகஸ்ட் 14ம் தேதி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைக்கு வருகிறது.