சில்லுனு ஒரு காதல் வரும்போது மமிதா பைஜூ படித்தது என்ன தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

சில்லுனு ஒரு காதல் வரும்போது மமிதா பைஜூ படித்தது என்ன தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

சென்னை: மமிதா பைஜூ இப்போது வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். கடைசியாக அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் மமிதாவின் நடிப்பு அப்ளாஸை அள்ளியது. அடுத்ததாக அவர் சூர்யாவுடன் நடித்திருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை மமிதா பைஜு இப்போது சென்சேஷனல் நடிகையாக மாறியிருக்கிறார். பிரேமலு, ட்யூட் ஆகிய திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. தனுஷுக்கு ஜோடியாக நடித்த கர தோல்வியடைந்தது. அழகு மட்டுமின்றி அதீத திறமை வாய்ந்தவராகவும் திகழ்கிறார். பாலாவின் வணங்கான் திரைப்படத்திலேயே அவர் நடித்திருக்க வேண்டியது.

Mamitha Baiju Reveals Her Favourite Suriya Film I Watched It Many Times With My Brother

கிளம்பிய சர்ச்சை: ஆனால் அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது பாலாவுக்கும், மமிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கு காரணம் மமிதாவை பாலா அடித்ததுதான் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் வதந்தி என்பது பின்னர் பாலா கொடுத்த பேட்டிகளின்போது தெரியவந்தது. லெஜண்ட்ரி இயக்குநரின் இயக்கத்தில் நடித்து பெயர் வாங்கலாம் என்று இருந்த மமிதாவுக்கு; வணங்கான் நழுவிப்போனது கொஞ்சம் வருத்தத்தைத்தான் கொடுத்திருக்கும்.

மமிதாவின் விஸ்வநாத் & சன்ஸ்: அதேசமயம் அதை சரிக்கட்டும் விதமாக மற்ற படங்களில் நடித்து பெயர் வாங்கிவருகிறார். கடைசியாககூட விஜய்யுடன் ஜனாநாயகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரிய வெற்றி பெறும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவர் மசாலா காரணமாக விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை திருப்திப்படுத்தவில்லை. அடுத்தாக சூர்யாவுக்கு ஜோடியாக விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.

புகழ்ந்த ராதிகா: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திலும் மமிதாவுக்கு சூப்பர் பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது நடிப்பு ட்ரெய்லரிலேயே அட்டகாசமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவருடன் பணியாற்றியது குறித்து சீனியர் நடிகை ராதிகாகூட ஒரு பேட்டியில், "மமிதா பைஜுவின் நடிப்பை பார்த்து நான் அசந்து போய்விட்டேன். எவ்வளவு பெரிய சீனாக இருந்தாலும் அந்தப் பெண் அசால்ட்டாக நடித்துவிடுகிறார் என புகழ்ந்திருந்தார்.

ட்ரெண்டாகும் வீடியோ: மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான ராதிகாவே இப்படி பாராட்டியிருப்பது ஆரோக்கியமான ஒன்று. இந்நிலைய்ல் மமிதாவின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டியில் சூர்யா, மமிதா, ராதிகா, வெங்கி அட்லூரி கலந்துகொண்டார்கள். அப்போது மமிதாவிடம் தொகுப்பாளினி, 'சூர்யா படங்களில் நீங்கள் எந்தப் படத்தை அதிகம் பார்த்தீர்கள்' என கேட்டார்.

அதற்கு பதிலளித்த மமிதாவோ, 'சில்லுனு ஒரு காதல்'. அந்தப் படத்தை நானும் எனது சகோதரரும் பல முறை பார்த்திருக்கிறோம் என பதிலளித்தார். அந்த சமயத்தில் குறுக்கிட்ட சூர்யா, 'அந்தப் படம் வரும்போது என்ன படித்தீர்கள்' என கேட்க; மமிதாவோ, 5 அல்லது ஆறாம் வகுப்பு என்று சொல்ல; அங்கிருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் சிரித்துவிட்டார்கள்.
 

LATEST News

Trending News

HOT GALLERIES