Iniya: அதிர்ஷ்ட தேவதை.. இன்ஸ்டாவை அல்லாட வைக்கும் தேவயானியின் மகள் இனியா!

Iniya: அதிர்ஷ்ட தேவதை.. இன்ஸ்டாவை அல்லாட வைக்கும் தேவயானியின் மகள் இனியா!

சென்னை: தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகை தேவயானியின் குடும்பத்திலிருந்து அடுத்தடுத்து இரு மகள்களும் திரையுலகில் தங்களது தடத்தைப் பதிக்கத் தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இணையத்தில் பிஸியாக இருக்கும் இனியா செல்ஃபி புள்ளையாக மாறி மாஸ் காட்டி இருக்கிறார்.

மூத்த மகள் இனியா: தனது மூத்த மகள் இனியாவுக்கு பாடுவதில் மிகுந்த ஆர்வம் இருந்ததை அறிந்த தேவயானி, அவரை தொலைக்காட்சியின் பிரபல இசை நிகழ்ச்சியான 'சரிகமப'வில் போட்டியாளராக அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியின் போது பேசிய தேவயானியின் கணவரும் இயக்குநருமான ராஜகுமாரன், இனியா பாடுவதைக் கேட்கும்போது ஏதோ சாதித்த மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது எல்லாத்திற்கும் காரணம் நான் இல்லை, என் மனைவி தேவயானி தான் என நெகிழ்ச்சியுடன் பெருமையாக பேசினார்.

அங்கீகாரம்: அவர் சொன்னபடியே, பிரபல நடிகையாக இருந்தபோதிலும் தேவயானி எவ்வித பந்தாவும் இன்றி வாரந்தோறும் மற்ற பெற்றோர்களுடன் வரிசையில் அமர்ந்து மகளின் பாட்டைப் பார்த்து ரசித்து மகளை உற்சாகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறமுடியாவிட்டாலும், இனியாவிற்கு மக்களிடையே அது மாபெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.

கன்னத்தில் குழி அழகி: இசை நிகழ்ச்சிக்கு பிறகு சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக வலம் வரும் இனியா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி முன் நின்று எடுத்த 'மிர்ரர் செல்ஃபி' புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கன்னத்தில் விழும் சுழி அழகை அப்படியே அச்சுபிசகாமல் தேவயானியின் சாயலிலேயே பிரதிபலிப்பதாக கூறி, ரசிகர்கள் அதிர்ஷ்ட தேவதை, அம்மா மாதிரியே பேரழகு எனத் தங்களது லைக்ஸ்களையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

Devayani iniya photo

இளைய மகள் பிரியங்கா: மூத்த மகள் இனியா இசைத்துறை பக்கம் செல்ல, இளைய மகளான பிரியங்காவிற்கு நடிப்பில் ஆர்வம் இருந்துள்ளது. அதற்கேற்ப தற்போது அவரும் மாஸாக நடிகையாகக் களமிறங்க உள்ளார். தெலுங்கில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்ற 'Court: State vs a Nobody' என்ற திரைப்படம் தமிழில் 'ரஞ்சன் தி அட்வகேட்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாகத் தேவயானியின் இளைய மகள் பிரியங்கா அறிமுகமாகி திரையுலகிற்கு என்ட்ரி கொடுக்கவுள்ளார். அம்மாவைப் போலவே இரு மகள்களும் கலைத்துறையில் தங்களின் திறமையால் மின்னத் தொடங்கி இருப்பது தேவயானி - ராஜகுமாரன் குடும்பத்தினரையும் அவர்களது ரசிகர்களையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LATEST News

Trending News