60 வயதிலும் குறையாத அழகு.. ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் நடிகை நதியா!
சென்னை: 80களின் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து, தனது வசீகர புன்னகையாலும் அசாத்திய நடிப்பாலும் தனக்கெனத் தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டவர் நடிகை நதியா. பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தபோதிலும், ஒரு படத்தில் கூடக் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்காமல் தனது கண்ணியமான ஆடை அலங்காரத்தால் புகழ்பெற்றார்.
நடிகை நதியா: 'பூவே பூச்சூடவா' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நதியா, அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதன் பின் பூக்களைப் பறிக்காதீர்கள், மந்திரப் புன்னகை, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என அடுத்தடுத்து பல வெற்றி படங்களைக் கொடுத்தார். இவர் சினிமா உச்சத்தில் இருந்த காலத்தில் நதியா கம்மல், நதியா மூக்குத்தி, நதியா கொண்டை, நதியா உடை என அப்போதைய பெண்களின் ஃபேஷன் டிரெண்டையே மாற்றி அமைத்தார். தமிழ், தெலுங்கு, மலையானம் என உச்சத்தில் இருக்கும்போதே தனது நீண்ட நாள் நண்பரான சிரிஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.

செகண்ட் இன்னிங்ஸ்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்த நதியா, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். அதன்பின் தெலுங்கில் திரிஷ்யம், திரிஷ்யம் 2 படங்களில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துப பாராட்டுக்களைப் பெற்றார். இவர் கடைசியாக தோனியின் மனைவி சாஷி சிங் தோனி தயாரித்த 'Let's Get Married' (LGM) திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

60 வயசா... நம்பவே முடியல: சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நதியா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொப்பி அணிந்து, கூல் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 1966-ஆம் ஆண்டு பிறந்த நதியாவிற்குத் தற்போது 60 வயதாகிறது. ஆனால், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இவருக்கு 60 வயசுனு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. இன்னமும் அப்படியே 20 வயது பெண் மாதிரியே இருக்காங்க, எவர்கிரீன் நதியா எனச் வியந்து கமெண்டுகளை பகிர்ந்து அவரிடம் அழகு குறிப்புகளை கேட்டு வருகின்றனர்.