விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு தமிழ்நாட்டில் பல கோடி நஷ்டம்.. ஷாக்கிங் ரிப்போர்ட்

விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு தமிழ்நாட்டில் பல கோடி நஷ்டம்.. ஷாக்கிங் ரிப்போர்ட்

Viswanath & Sons Movie Tamil Nadu loss details: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்த விநியோகஸ்தருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

 

விஸ்வநாத் & சன்ஸ்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒன்று விஸ்வநாத் & சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இயக்கிய லக்கி பாஸ்கர் மாபெரும் வெற்றி பெற்றது.

வெங்கி அட்லூரி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியான இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் லாபத்தை எட்டியது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் லாபத்தை எட்டவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நஷ்டம்

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை Primark Productions எனும் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது. இப்படத்தை ரூ. 48 கோடிக்கு வாங்கித்தான் இவர்கள் தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 41 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால் இப்படத்தை வெளியிட்ட Primark Productions நிறுவனத்திற்கு ரூ. 22+ கோடி ஷேர் கிடைத்துள்ளது. இதனால் ரூ. 26 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு தமிழ்நாட்டில் பல கோடி நஷ்டம்.. ஷாக்கிங் ரிப்போர்ட் | Viswanath And Sons Movie Tamil Nadu Loss Details

LATEST News

Trending News