'வருமானத்திற்காக, வாழ்க்கைகாக எதையும் செய்யலாம்...' - நடிகை பாத்திமா சனா ஷேக்

'வருமானத்திற்காக, வாழ்க்கைகாக எதையும் செய்யலாம்...' - நடிகை பாத்திமா சனா ஷேக்

Actress Fatima Sana Shaikh's recent speech about cinema industry goes viral: பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக்சமீபத்திய பேட்டி ஒன்றில் "வருமானத்திற்காக, வாழ்க்கைகாக எதையும் செய்யலாம், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறோம்" என கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாத்திமா சனா ஷேக்

அமீர் கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாத்திமா சனா ஷேக். இதன்பின், தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான், சாம் பகதூர், மெட்ரோ இன் டைனோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அவர் கூறியதாவது:

"பாலிவுட் சினிமாவில் பெண்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் குறைவாகவே உள்ளன. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு நல்ல, ஆழமான கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. அங்கும் சில பிரிவினைவாத விஷயங்கள் இருப்பது வருத்தம் தருகிறது. சில நேரங்களில் வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கும். அப்போது, பணத்திற்காக நமக்கு விருப்பமில்லாத பணிகளைக்கூட செய்ய வேண்டிய சூழல் வரும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "நாங்கள் வசதியான குடும்பம் பின்னணியிலிருந்து வரவில்லை. சில சமயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். கிடைக்கும் சில வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டியிருக்கும். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நாம் எவ்வளவுதான் கனவு கண்டாலும், அதை தீர்மானிப்பது நாமாக இருக்க முடியவில்லை. வருமானத்திற்காக, வாழ்க்கைகாக எதையும் செய்யலாம், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறோம்" என தெரிவித்தார். 

LATEST News

Trending News