தமன்னாவுக்கு வந்த அம்மாவாகும் ஆசை?.. செம பிளானில் இருக்காங்க.. குழந்தைகள் கொடுத்து வெச்சவங்க
மும்பை: நடிகை தமன்னா கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டில் ஃபேமஸான நடிகை. விஜய் வர்மாவை காதலித்த அவர்; சில காலத்திலேயே பிரேக் அப் செய்துவிட்டார். இப்போது சிங்கிளாக இருக்கும் அவர் நடிப்பில் பிஸியாகியிருக்கிறார். இந்நிலையில் தான் தாய்மை அடைந்தால் எப்படிப்பட்ட அம்மாவாக இருப்பேன் என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தமிழில் வில்லியாக பயணத்தை தொடங்கிய தமன்னா; குறுகிய காலத்திலேயே பெரிய அலையை ஏற்படுத்தினார். அவருடன் நடிப்பதற்கு நடிகர்களும், அவர் நடிப்பதை பார்க்க ரசிகர்களும் போட்டி போட்டார்கள் என்றே சொல்லலாம். கோ படத்தில் தமன்னாவை ஹீரோயினாக ஃபிக்ஸ் செய்யாததால்தான் சிம்பு அதிலிருந்து வெளியேறினார் என்றே ஒரு பேச்சு உண்டு. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

சரிந்த மார்க்கெட்: கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் ரவுண்டு கட்டி அடித்தார். எனவே தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தார். அப்போது காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதிலிருந்து அவருக்கு நேரம் சரியில்லை. வரிசையாக வந்த வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து; திடீரென ஒன்றுமே இல்லாமல் ஆக்கியது. இதனால் உயர்ந்த வேகத்துக்கு சரிந்தார் அவர். அதனையடுத்து ஹிந்திக்கு சென்றார்.
காதலில் தமன்னா: அங்கே தாராள கவர்ச்சியை எல்லாம் காண்பித்து; தனக்கென மார்க்கெட்டை உருவாக்கினார். அந்த் சமயத்தில் நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். இரண்டு பேரும் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவர்களுக்குள் சில விஷயங்கள் ஒத்து வராததால் பிரேக் அப் செய்துகொண்டார்கள். இப்போது தம்மு சிங்கிளாகவே இருக்கிறார்.
ட்ரெண்டாகும் பேட்டி: கரியரை பொறுத்தவரை தமிழில் புருஷன் படத்தில் நடித்துவருகிறார். சுந்தர்.சி இயக்கம் என்பதால் இதன் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "எதிர்காலத்தில் எனக்கு குழந்தைகள் பிறந்தால் நான் கண்டிப்பான அம்மாவாகத்தான் இருப்பேன் என என்னுடைய அம்மா நினைக்கிறார். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
கூலான அம்மா: நான் எப்போதும் கூலான அம்மாவாகவும், எனது குழந்தைகளுடன் சகஜமாகவும், ஜாலியாகவும் பழகும் தாயாகவும்தான் இருப்பேன். இன்று பள்ளிக்கு போக வேண்டாம் சந்தோஷமாக வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லும் அம்மாவாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும். தாயாக மட்டுமில்லாமல் அவர்களுக்கு நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்றார். இதை பார்த்த ரசிகர்கள், தமன்னாவுக்கு அம்மாவாகும் ஆசை வந்துவிட்டது போல என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.