அடல்ட் சீரிஸுக்கு அப்புறமும் ஓயாத கவர்ச்சி.. வாய்ப்புக்காக எல்லை மீறுகிறாரா திவ்யா கணேஷ்?

அடல்ட் சீரிஸுக்கு அப்புறமும் ஓயாத கவர்ச்சி.. வாய்ப்புக்காக எல்லை மீறுகிறாரா திவ்யா கணேஷ்?

சென்னை: சின்னத்திரை சீரியல்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே குடும்ப பாங்கான நடிகையாக அறிமுகமாகி, பிக் பாஸ்' தமிழ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை திவ்யா கணேஷ். வெள்ளித்திரையில் பெரிய வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வலம் வரும் இவருக்கு படவாய்ப்பு எதுவும் அமையாததால் கவர்ச்சி உடையுடன் வலம் வருகிறார்.

திவ்யா கணேஷ்: விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்த திவ்யா கணேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் வீட்டிற்குள் வந்ததுமே, யாருக்கும் பயப்படாமல் தனக்கு சரி என்று பட்டத்தை வெளிப்படையாக பேசி மக்கள் மனதில் இடம் பிடித்து பிக் பாஸ் சீசன் 9ல் வெற்றியும் பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், 'ஆஹா' ஓடிடி தளத்தில் வெளியான 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அந்த வெப் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான கவர்ச்சி உடைகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து நெட்டிசன்களை ஷாக்காக்கினார். பிக் பாஸ் வீட்டிற்குள் குடும்பப் பெண்ணாக, அடக்க ஒடுக்கமாக இருந்த திவ்யா கணேஷா இது? வாய்ப்புக்காக முதல் தொடரிலேயே இவ்வளவு தூரம் இறங்கிவிட்டாரே என நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமரிசித்துத் திட்டித் தீர்த்தனர்.

Bigg Boss Divya Ganesh

தொடரும் கிளாமர் அவதாரம்: அடல்ட் தொடரில் நடித்த பிறகும் அவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் எதும் அமையவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தற்போது திரைப்பட விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வரும்போது வரம்பு மீறிய கவர்ச்சி உடைகளில் வலம் வந்து மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வெள்ள நிறத்தில் மிகவும் கவர்ச்சியான மேல் உடையும், கருப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்து வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள், சினிமா வாய்ப்புக்காக குடும்பப் பாங்கான இமேஜை உடைத்து இப்படி செய்யலாமா திவ்யா? எனக் கேள்வி எழுப்பி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி வருகின்றனர்.

LATEST News

Trending News