உலகையே மிரள வைத்த கைலி ஜென்னரின் வைரக்கற்களான உள்ளாடை!! ரூ. 474 கோடியாம்..
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமாகி சினிமா பயணத்தை தொடங்கியவர் தான் கைலி ஜென்னர். மாடலிங் துறையில் களமிறங்கிய கைலி முன்னணி ஸ்டார் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

21 வயதிலேயே அமெரிக்காவின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்தாவர் கைலி ஜென்னர். தற்போது 29 வயதாகும் அவர் உலகின் முன்னணி மாடல் அழகியாக ஜொலித்து வருகிறார்.
சொந்தமாக அழகு சாதன தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலமும் சம்பாதித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவரை சுமார் 381 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், விக்டோரியா சீக்ரெட் ஃபென்சன் ஷோவில் உள்ளாடையுடன் ஜொலித்தார். அவரின் அந்த உள்ளாடை முழுக்க முழுக்க வைர கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 4,410 வைர கற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த உள்ளாடை 1,373.39 காரட் என்று கூறப்படுறது.
73.54 காரட் மஞ்சள் நிற வைரமும் பயன்படுத்தப்பட்ட அந்த உள்ளாடை சுமார் 50 மில்லியன் டாலர் மதிப்புடையதாம். இந்திய மதிப்பில் சுமார் 474.65 கோடி ரூபாய் கொண்ட அந்த உள்ளாடை 1000 மணிநேரம் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ளதாம்.