14 ஆண்டுகால காதல்.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் திருமணம்! மணமகன் யார் தெரியுமா?

14 ஆண்டுகால காதல்.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் திருமணம்! மணமகன் யார் தெரியுமா?

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், 14 ஆண்டுகால காதலரான இசையா நட்டரை இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது 14 ஆண்டுகால காதலரான இசையா நட்டரை (Isaiah Natare) திருமணம் செய்துகொண்டார். இத்தாலியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணப் புகைப்படங்களை அஞ்சனா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அக்டோபர் 19, 2026 அன்று நடைபெற்ற இந்தத் திருமணம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

14ஆண்டுகால காதல்..இத்தாலியில் திருமணம்!

அஞ்சனா தனது திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து, “To forever. 19.10.2026 #14yearslater” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இசையாவுடனான தனது நீண்டகாலக் காதல் திருமணத்தில் முடிந்திருப்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு இத்தாலியின் கோமோ ஏரிக்கரையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இத்தாலியில் உள்ள வில்லா செட்டினாலே (Villa Cetinale) பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் இந்து முறைப்படி தாலி கட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மேற்கத்திய கிறிஸ்தவ முறைப்படி திருமண நிகழ்ச்சியும் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரம்பரிய தென்னிந்திய உடைகளிலும், பின்னர் மேற்கத்திய திருமண ஆடைகளிலும் மணமக்கள் தோன்றியுள்ளனர்.

யார் இந்த இசையா நட்டர்?

அஞ்சனாவின் வாழ்க்கைத் துணையான இசையா நட்டர் வெளிநாட்டைச் சேர்ந்தவர். இருவரும் சுமார் 14 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும், இசையாவின் தொழில், குடும்பப் பின்னணி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் குறித்த நம்பகமான தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.

அஞ்சனா தனது தந்தையைப் போலத் திரையுலகில் நடிப்பதற்குப் பதிலாகத் தொழில்முனைவில் கவனம் செலுத்தி வருகிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்த ஃபேஷன் தயாரிப்புகளை மையமாகக் கொண்ட ‘சர்ஜா’ (Sarjaa) என்ற பிராண்டை தொடங்கியுள்ளார்

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகரும் இயக்குநர் தம்பி ராமையாவின் மகனுமான உமாபதி ராமையாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 2024 ஜூன் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. துகொண்டனர். ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். உமாபதியும் நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

LATEST News

Trending News