உறவினரான விஷாக்குடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த கீர்த்தி சுரேஷ்!! ஷாக்கான ராதிகா..
அக்கா
இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணைந்து நடித்து அக்டோபர் 30 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ள வெப் தொடர் தான் 'அக்கா'. இத்தொடரின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் கீர்த்தி, ராதிகா இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி தன்னுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த நடிகர் விஷாக் நாயர் குறித்து பேசியது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது.
விஷாக்குடன் ரொமான்ஸ்
கீர்த்தி சுரேஷ் பேசுகையில், விஷாக்கும் நானும் உறவினர்கள்(cousin). என்னுடைய செக்ண்ட் கசின். அவருடன் காதல் காட்சியில் நடிக்கும் போது சாதாரணமாக இல்லை, ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னுடைய உறவினர் என்று பலருக்கும் தெரியாது.

இதுகுறித்து விஷாக்கிடம் சொன்னபோது அவரும் ஷாக்காகி அப்படியே என்று கேட்டார் என கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக பேசினார். இதனை கேட்ட நடிகை ராதிகா ஆப்தே, ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.