ராமாயணம் படப்பிடிப்பில் லாரா தத்தாவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத சிக்கல்!

ராமாயணம் படப்பிடிப்பில் லாரா தத்தாவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத சிக்கல்!

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை லாரா தத்தாவுக்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் கைகேயி கதாபாத்திரத்தில் நடித்து வரும் லாரா தத்தா, படப்பிடிப்பின்போது அணிந்திருந்த வளையல் கையில் சிக்கிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வளையலை சாதாரணமாக அகற்ற முடியாததால், படக்குழுவினர் ஹேக்சா பிளேடு எனப்படும் அறுக்கும் கருவியைப் பயன்படுத்தி அதை அகற்றியதாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்பிற்காக நடிகர்கள் அணியும் கனமான ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஒப்பனைகளுக்குப் பின்னால் இருக்கும் சிரமங்களை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

LATEST News

Trending News