அரசியலுக்கு வரது இருக்கட்டும்.. 6 மணி ஷோவை ஹவுஸ்ஃபுல் ஆக்கினாரா ’ஓம்’ தனுஷ்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' (O.M) திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
6 மணி காட்சிக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறைவா?
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'ஓம்'.
படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சில திரையரங்குகளில் மட்டுமே அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஏஜிஎஸ் திரையரங்குகளில் 6 மணி காட்சிக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் காலை 8 மணி மற்றும் 9 மணி காட்சிகளுக்கான முன்பதிவுகளே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
சில திரையரங்குகளில் அதிகாலை 6 மணி காட்சிகள் இன்னும் ஹவுஸ்ஃபுல் ஆகாததைச் சுட்டிக்காட்டி தனுஷின் எதிர்ப்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், சூர்யாவின் 'சீன்' திரைப்படம் அதிகாலை காட்சிகளுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்படும் நிலையில், தனுஷின் 'ஓம்' படத்துடன் ஒப்பிட்டு விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், 'ராமாயணா', 'சீன்' உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடுவதால் 'ஓம்' திரைப்படத்திற்குக் கிடைக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் விவாதப் பொருளாகியுள்ளது.
எனினும், படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் முன்பதிவு நிலவரம் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.