அப்பா மம்மூட்டியுடன் பாக்ஸ் ஆபீஸில் மோதும் துல்கர் சல்மான்! உணர்ச்சிப்பூர்வமாக வெளியான AOT டிரெய்லர்!
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் இடையே இந்த வாரம் திரையரங்குகளில் சுவாரஸ்யமான போட்டி உருவாகியுள்ளது. தந்தை மம்மூட்டியின் திரைப்படமும், மகன் துல்கர் சல்மானின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உணர்ச்சிப்பூர்வமான AOT டிரெய்லர்!
இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' (Aakasamlo Oka Tara) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தில் துல்கர் சல்மானுடன் சாத்விகா வீரவள்ளி மற்றும் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற கனவுடன் வாழும் கல்பனா என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அவரது கனவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் துணை நிற்கிறார்.
டிரெய்லரில் இடம்பெற்றுள்ள உணர்ச்சிகரமான காட்சிகளும், துல்கர் சல்மானின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. குறிப்பாக, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்ற கருத்துடன் டிரெய்லர் தொடங்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அப்பா மம்மூட்டி – மகன் துல்கர் சல்மான் மோதல்!
மம்மூட்டி நடித்துள்ள 'ஓம்' (O.M) திரைப்படமும், துல்கர் சல்மானின் AOT திரைப்படமும் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வெளியாகவுள்ளன.
இதனால் தந்தை மற்றும் மகன் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் திரைக்கு வருவது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இரண்டு திரைப்படங்களும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எந்தப் படம் அதிக வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
துல்கர் சல்மானின் AOT திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது