சந்தாவால் வெடித்த குடும்பப் பிரச்சனை! சேரனை அடித்த சோழன்... அதிர்ச்சியில் அய்யனார் துணை ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான அய்யனார் துணை சீரியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீரியலில் பல்லவன் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து பட்டம் பெறுகிறார். இதற்காக குடும்பத்தினர் அனைவரும் கல்லூரிக்குச் செல்கின்றனர். அப்போது தனது தம்பியின் சாதனையைப் பார்த்து மகிழ்ச்சியடையும் சேரன், "இவன் என்னுடைய தம்பி மட்டுமல்ல, என் உலகமே இவன்தான்" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இதைக் கேட்ட சந்தா, அப்படியானால் நான் அவருடைய உலகம் இல்லையா என நிலாவிடம் கண்கலங்கிக் கேட்கிறார். அதற்கு நிலா, சந்தாவிடம் கோபமாகப் பேசுகிறார்.
இந்தச் சிறிய விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி சந்தா புதிய பிரச்சனையை ஏற்படுத்துகிறார். இதனால் குடும்பத்தினரிடையே வாக்குவாதம் வெடிக்கிறது.
ஒருகட்டத்தில் சோழனுக்கும் பாண்டியனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் சோழன் சேரனைத் தவறுதலாக அடித்துவிடுகிறார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.
இதனால் அய்யனார் துணை குடும்பத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.