1000 கோடியை தொட்ட ஜெயிலர் 2.. என்றும் நம்பர் 1 ரஜினிகாந்த் மட்டும்தான்

1000 கோடியை தொட்ட ஜெயிலர் 2.. என்றும் நம்பர் 1 ரஜினிகாந்த் மட்டும்தான்

Jailer 2 1000 crore revenue: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் அந்த விஷயம் நடக்கவில்லை. இந்நிலையில், ரூ. 1000 கோடியை ஜெயிலர் 2 தொட்டிருப்பதாக சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

ஜெயிலர் 2

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சிவராஜ் குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், மிர்னா, யோகி பாபு, நமோ நாராயணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

1000 கோடியை தொட்ட ஜெயிலர் 2.. என்றும் நம்பர் 1 ரஜினிகாந்த் மட்டும்தான் | Jailer 2 1000 Crore Revenue

 

ஜெயிலர் 2 வசூல்

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க உலகளவில் ரூ. 840 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது. ஆனால், இப்படம் உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்யும், இதன் மூலம் தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி திரைப்படம் என்கிற சாதனையை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அது நடக்கவில்லை.

1000 கோடியை தொட்ட ஜெயிலர் 2.. என்றும் நம்பர் 1 ரஜினிகாந்த் மட்டும்தான் | Jailer 2 1000 Crore Revenue

1000 கோடியை தொட்ட

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடி வசூல் செய்யவில்லை என்றாலும், உலகளவில் செய்த வசூல் + OTT பிசினஸ் + Satellite + Music என Revenue மூலம் ரூ. 1000 கோடியை தொட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், ரூ. 1000 கோடியை தொட்ட முதல் தமிழ் திரைப்படம் ஜெயிலர் 2 என்ற சாதனையை படைத்துள்ளது.

1000 கோடியை தொட்ட ஜெயிலர் 2.. என்றும் நம்பர் 1 ரஜினிகாந்த் மட்டும்தான் | Jailer 2 1000 Crore Revenue

பொறுப்பு துறப்பு: ஜெயிலர் 2 குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News