சூப்பர் சிங்கர் பிரபலம் சிவாங்கியின் மாடர்ன் லுக் போட்டோஷூட்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகிய சிவாங்கி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பணியாற்றி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் போட்டியாளராக கலம் கண்டு தற்போது மாடர்ன் லுக்கில் கலக்கி வருகிறார். அவரின் ரீசென்ட் போட்டோஸ்..
சிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீனியர் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் சிவாங்கி கிருஷ்ணகுமார்.
டாப் 6 இடத்தை பிடித்த சிவாங்கி, குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அதனையடுத்து, டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசேதான் கடவுளடா, ஷாட் பூட் த்ரீ உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாகவும் கலக்கி வந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி, மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.