நகர்ந்துகொண்டே இருந்த பொம்மை; விசித்திரமான அனுபவம்: ஸ்ருதி ஹாசனின் மும்பை வீட்டில் அமானுஷ்ய நடமாட்டம்?
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மும்பை வீட்டில் சந்தித்த விசித்திரமான அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தத் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், தனது வீட்டில் 'ஃபியோனா' (Fiona) எனப் பெயரிட்டு வைத்திருந்த மனித உருவ பொம்மை (Mannequin) ஒன்று மர்மமான முறையில் இடம் மாறியதாக தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள தனது வீட்டில் ஏதோ அமானுஷ்யமான ஆற்றல் இருப்பதாக உணர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பொம்மை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அவர், கையில் உப்பை வைத்துக்கொண்டு ஹனுமான் சாலிசா மந்திரத்தை ஒலிக்கச் செய்ததாகவும், பின்னர் அந்தப் பொம்மையைப் பிரித்து அகற்றியதுடன் வீட்டின் முழுப் பகுதியையும் மூடி சுத்திகரிப்பு சடங்குகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நேஹா தூபியா மற்றும் அங்கத் பேடி நடத்தும் 'Double Date' யூடியூப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே ஸ்ருதி ஹாசன் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அவரது இந்த விசித்திரமான அனுபவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.