ஒரே ஃப்ரேமில் அஜித், தோனி, ரஜினி.. அனிருத் ரிசப்ஷனில் தெறிக்கும் ‘ஆரா’ புகைப்படம்!

ஒரே ஃப்ரேமில் அஜித், தோனி, ரஜினி.. அனிருத் ரிசப்ஷனில் தெறிக்கும் ‘ஆரா’ புகைப்படம்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே ஃப்ரேமில் இடம்பெற்ற புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகம், கிரிக்கெட் மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் அஜித் குமார், எம்.எஸ். தோனி உள்ளிட்ட பிரபலங்களின் வருகை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அஜித் மற்றும் தோனி இருவருமே ரசிகர்களால் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படுபவர்கள் என்பதால், இருவரும் ஒரே நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், ரஜினிகாந்துடன் அஜித் அன்பாக உரையாடி, கட்டியணைத்துக் கொண்ட காட்சிகளும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

இந்த நட்சத்திரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “ஒரே ஃப்ரேமில் இரண்டு தல மற்றும் தலைவரா?”, “உச்சக்கட்ட ஆரா”, “இந்தப் புகைப்படம் வேற லெவல்” என உற்சாகமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

அனிருத் - காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மணமக்களை வாழ்த்த வந்த பிரபலங்களின் சந்திப்புகளால் மட்டுமல்லாமல், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில அரிய புகைப்படங்களாலும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

LATEST News

Trending News