திருமணக் கொண்டாட்டத்தில் ஊழியர்களுக்கும் தங்கப் பரிசு! அசத்திய காவ்யா மாறன் – அனிருத் ஜோடி!

திருமணக் கொண்டாட்டத்தில் ஊழியர்களுக்கும் தங்கப் பரிசு! அசத்திய காவ்யா மாறன் – அனிருத் ஜோடி!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமணம் தற்போது திரையுலகிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 21) சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், திருமண மகிழ்ச்சியைத் தங்களது நிறுவன ஊழியர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் வகையில் காவ்யா மாறன் சிறப்புப் பரிசுகளை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் புத்தாடைகள் மற்றும் ஒரு கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சில ஊழியர்களுக்குத் தங்க மோதிரங்கள் மற்றும் இனிப்புப் பெட்டிகளும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், வரும் நவம்பர் 25ஆம் திகதி பிற்பகல் 1 மணியளவில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் அமைந்துள்ள சன் டிவி தலைமை அலுவலகத்தில் ஊழியர்களுக்காகத் தனிப்பட்ட வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியைத் தனது நிறுவன ஊழியர்களுடனும் பகிர்ந்துகொண்ட காவ்யா மாறனின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

LATEST News

Trending News