அனிருத் – காவ்யா மாறன் ரிசப்ஷனுக்கு திரிஷா வராதது ஏன்? பிரபல பத்திரிகையாளர் சொன்ன காரணம்!
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகம், அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால் நடிகை திரிஷா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
திரிஷா வராததற்கு என்ன காரணம்?
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் கலந்துகொண்டார். மேலும், விஜய்யின் மனைவி சங்கீதாவும் தனியாக வந்து மணமக்களை வாழ்த்தியதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், திரிஷா நிகழ்ச்சிக்கு வராதது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, விஜய் மற்றும் திரிஷா தொடர்பாக ஏற்கனவே பேசப்பட்டு வரும் சர்ச்சைகள் காரணமாக, இந்த நிகழ்ச்சியில் தேவையற்ற பேச்சுகள் எழுவதைத் தவிர்க்கவே அவர் வரவில்லை என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.