விமான நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம்- வருத்தமாக பதிவு போட்ட எஸ்.எஸ். ராஜமௌலி

விமான நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம்- வருத்தமாக பதிவு போட்ட எஸ்.எஸ். ராஜமௌலி

தெலுங்கு சினிமாவில் மிகவும் வித்தியாசமான படங்கள் கொடுத்து சாதனை செய்தவர் எஸ்.எஸ். ராஜமௌலி.

இவர் தற்போது டோலிவுட்டின் முன்னணி நாயகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து மிகப் பெரிய படம் இயக்கி வருகிறார். படத்தின் சில அப்டேட்டுகள், போஸ்டர்கள் எல்லாம் இதற்கு முன் வெளியாகி இருக்கிறது.

அண்மையில் எஸ்.எஸ். ராஜமௌலி அவர்கள் டெல்லி பயணம் சென்றுள்ளார். அங்கு நடந்த சம்பவம் குறித்து ஒரு மோசமான பதிவை அவர் போட்டுள்ளார். 

அதில் அவர்,  லுப்தான்சா விமானம் மூலம் அதிகாலை 1 மணிக்கு வந்திறங்கினோம். ஆர்டிபிசிர் சோதனைக்கான படிவத்தை நிரப்பச் சொன்னார்கள்.

அனைத்து பயணிகளும் தரையில் உட்கார்ந்தும், சுவற்றில் வைத்தும் அந்தப் படிவங்களை நிரப்பினார்கள். அதைப் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை.

மேஜைகளை வைப்பது ஒரு சாதாரண சேவை. வெளியேறும் கேட்டுக்கு வெளியே பல தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா மீதான முதல் பார்வை எப்படி இருக்கும்?. தயவு செய்து இதைக் கவனியுங்கள் என வருத்தத்துடன் டுவிட் செய்துள்ளார்.

LATEST News