எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி இதுவா?

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி இதுவா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாக உள்ளது. அதாவது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லைக்கா நிறுவனம் சற்று முன் தனது டுவிட்டரில் அதனை உறுதி செய்து உள்ளது. இதனை அடுத்து நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் மேக்கிங் வீடியோவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய் தேவ்கான், சமுத்திரகனி, ஆலியா பட், ஒலிவியா மோரீஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். விஜயேந்திர பிரசாத் கதையில் செந்தில்குமார் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News