இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகர்

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகர்

சினிமா நடிகர்கள் பலர் திருமணம், மறுமணம், விவாகரத்து என சொந்த வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

அப்படி அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் காதுகளுக்கு எப்படியாவது வந்துவிடுகிறது. தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்தி உலா வருகிறது.

நடிகர் சுமந்த தான் P என்ற எழுத்தில் உள்ள ஒருவரை மறுமணம் செய்துகொள்ள போகிறார் என ஒரு பத்திரிக்கையே வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன மறுமணமா, அந்த எழுத்தில் யாரை திருமணம் செய்ய போகிறார் என நிறைய பேச தொடங்கிவிட்டனர்.

பின் நடிகர் சுமந்த் தனது சமூக வலைதள பக்கத்தில், நான் யாரை மறுமணம் செய்யவில்லை, அந்த பத்திரிக்கை நான் நடிக்கும் புதிய படத்திற்காக அடிக்கப்பட்டது என தனது புதிய படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

LATEST News

Trending News