சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் விஜய்-விக்ரம் பட நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் விஜய்-விக்ரம் பட நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் வில்லன் நடிகர் ஒருவர் இணைந்துள்ள தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும் இந்த படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’வேலாயுதம்’ ’தலைவா’ விக்ரம் நடித்த ’பத்து எண்றதுக்குள்ள’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES