சிரஞ்சீவியின் அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில்!
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அஜித் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’வரலாறு’. இந்த படத்திற்கு முதலில் ’காட்ஃபாதர்’ என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டு இருந்தது என்பதும் அதன்பின் வரலாறு என்று டைட்டில் மாற்றப்பட்டது என்பதும் தெரிந்ததே. மேலும் ’வரலாறு’ படத்தின் கன்னட ரீமேக் டைட்டில் ’காட்ஃபாதர்’ என்றுதான் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கு ’காட்ஃபாதர்’ இந்த டைட்டில் உறுதி செய்யப்பட்டு சற்று முன் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான மோகன்லாலின் ’லூசிபர்’ திரைப்படத்தின் ரீமேக் படமான இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். தமன் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும், இந்தப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.