மாலத்தீவில் பீச்பேபியாக மாறிய வித்யூராமன்: வைரல் புகைப்படங்கள்!

மாலத்தீவில் பீச்பேபியாக மாறிய வித்யூராமன்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையான வித்யூலேகா ராமன் சமீபத்தில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனிலவுக்காக மாலத்தீவு சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கணவருடன் தேனிலவு கொண்டாட மாலத்தீவு சென்ற வித்யூலேகா ராமன் அங்கிருந்து கிளாமரான புகைப்படங்கள் உட்பட பல புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவரது இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் வித்யூலேகா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் எடுத்த கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ‘பீச் பேபி ஆக வித்யூலேகா ராமன் மாறிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புகைப்படத்திற்கு அவர் கேப்ஷனாக, ‘வருடத்திற்கு இரண்டு முறை ஆறுமாத சுற்றுலா செய்ய விரும்புகிறேன்’ என்றும் அவர் நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES