பிங்க் உடையில் வேறலெவல் போட்டோஷுட்… பிக்பாஸ் நடிகையின் வைரல் புகைப்படம்!

பிங்க் உடையில் வேறலெவல் போட்டோஷுட்… பிக்பாஸ் நடிகையின் வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன்- 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் ரைசா வில்சன். இதற்குமுன்பு மாடலாக இருந்த இவர் “வேலையில்லாத பட்டதாரி 2” திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரம் ஒன்றின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியினால் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற இவர் அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து “பியார் பிரேமா காதல்“ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதையடுத்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்ஷுடன் இணைந்து “காதலிக்க நேரமில்லை“, நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து “எஃப்ஐஆர்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இசையமைப்பளார் யுவன்சங்கர் ராஜா தயாரிக்கும் “ஆலிஸ்“ திரைப்படத்திலும் “தி சேஸ்“, “சூர்ப்பனகை” போன்ற திரைப்படங்களிலும் இவர் இணைந்து நடித்து வருகிறார். இப்படி திரைப்படங்களில் படு பிசியான நடிகையாக மாறிப்போன நடிகை ரைசா வில்சன் சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராமில் அவ்வபோது கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் நடிகை ரைசா தற்போது மொட்டை மாடியில் நின்றுகொண்டு அடர்த்தியான பிங்க் நிறத்தில் மினி ஸ்கர்ட்டை அணிந்துகொண்டு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES