அருண்விஜய்யின் 'யானை' படத்தின் பொங்கல் விருந்து: ரசிகர்கள் உற்சாகம்!

அருண்விஜய்யின் 'யானை' படத்தின் பொங்கல் விருந்து: ரசிகர்கள் உற்சாகம்!

அருண் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. அருண் விஜய்யின் ‘யானை’ படத்தின் சிங்கிள் பாடல் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது/ இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த சிங்கிள் பாடலை ரசிக்க இசை ரசிகர்களும் ஆர்வத்துடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES