குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு

குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு

குக் வித் கோமாளி அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகிய ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் பொங்கல் நாளன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வந்தன. இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினுக்கும் படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்திருந்தனர்.

 

விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நடிகர் புகழ் காமெடியனாக நடித்த இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்து, டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

 

என்ன சொல்ல போகிறாய் படத்தின் போஸ்டர்

என்ன சொல்ல போகிறாய் படத்தின் போஸ்டர் 

 

இந்நிலையில் நடிகர் அஸ்வின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அதில் இறைவனை நம்பி மற்றும் உங்களின் அன்பு, இது ஹீரோவாக என்னுடைய முதல் படம். சாதாரண மனிதனின் ஆசை இது, இறைவனுக்கு நன்றி உங்கள் அன்புக்கு நன்றி, என்று நெகிழ்சியாக ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.

 

 

என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அஷ்வின் பேசிய ஒரு வீடியோ நெட்டிசகளின் மீம் டெம்ப்ளட்களாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News

HOT GALLERIES