ரஜினியை அடுத்து அஜித்: 'வலிமை' டிக்கெட்டுக்காக போட்டி போடும் ஜப்பான் ரசிகர்கள்!

ரஜினியை அடுத்து அஜித்: 'வலிமை' டிக்கெட்டுக்காக போட்டி போடும் ஜப்பான் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழகம் மற்றும் இந்தியாவில் மட்டுமின்றி ஜப்பானிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதும் ஜப்பான் ரசிகர்கள் ரஜினியின் படத்தின் டிக்கெட்டுக்களை போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினியை அடுத்து அஜித்தின் 'வலிமை’ படத்திற்கும் ஜப்பான் ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்தின் 'வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக பிப்ரவரி 24ஆம் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் ஹாலிவுட் படத்திற்கு இணையான படம் என்பதால் இந்த படத்தை பார்க்க உலக சினிமா ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் 'வலிமை’ பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து அந்த படத்திற்கான முன்பதிவு செய்ய அந்நாட்டு ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினியை அடுத்து மிக அதிக அளவில் அஜித்தின் படத்திற்கு தான் முன் பதிவு செய்யப்படுவதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES